×

விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு; கங்கனா வழக்கில் மூதாட்டிக்கு நோட்டீஸ்: பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து கூறிய கங்கனாவின் வழக்கில், அந்த மூதாட்டிக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா அடுத்த ஃபதேகர் ஜந்தியா கிராமத்தைச் சேர்ந்த மகிந்தர் கவுர்  என்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில்  பங்கேற்றார். அந்த மூதாட்டி குறித்து பாலிவுட் நடிகை கங்கனா, சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். இந்த  பதிவுக்கு மூதாட்டி கவுர் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தனது  குடும்பத்திற்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், 100 ரூபாய்க்காக  நான் போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள  முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து கவுர் சார்பில் பதிண்டா நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளிக்கப்பட்டது. ஐபிசி 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் கவுர் சார்பில் தாக்கல்  செய்த புகாரின் பேரில் பதிண்டா நீதிமன்றம் பிப்ரவரி மாதம் கங்கனா ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்து கங்கனா சார்பில் பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற  நீதிபதி மீனாட்சி ஐமேத்தா, ‘வரும் செப்டம்பர் 8ம் தேதி வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.  உயர்நீதிமன்றத்தில் கங்கனாவின் மனு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை, கங்கனா மீதான  அவதூறு வழக்கின் விசாரணையை பதிண்டா கீழ் நீதிமன்றத்தில் நடைபெறாது. இம்மனு தொடர்பாக மகிந்தர் கவுர் விரிவான பதிலை அளிக்க வேண்டும்’ எனக்கூறி அவருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது….

The post விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு; கங்கனா வழக்கில் மூதாட்டிக்கு நோட்டீஸ்: பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gangana ,Punjab iCourt ,Chandigarh ,Punjab High Court ,Dinakaran ,
× RELATED பெரும்பான்மையை இழந்தது பா.ஜ அரசு;...